ஜோசப் ஸ்டாலினைப் பார்வையிடுவதற்காக பொலிஸ் நிலையம் சென்றார் சஜித்!கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினைப் பார்வையிடுவதற்காக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார்.

கடந்த மே 28ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் ஜோசப் ஸ்டாலின் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலின் தற்போது கோட்டை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக சட்டத்தரணி ஜயந்த தெஹியத்தகே தெரிவித்துள்ளார்.

இந்தநிலையிலேயே அவரை பார்வையிடுவதற்காக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார்.