கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப வைபவம் இன்று (03.09.2022) மட்/பட்/குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி – புள்ளநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு தேசியக் கொடி, கிழக்கு மாகாணக் கொடி, மெயவல்லுனர் கொடி என்பன ஏற்றப்பட்டன. இதன் பின்னர் மங்கள விளக்கேற்றப்பட்டு இறைவணக்கத்துடன் கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன.
கடந்த இரண்டு வருடங்களாக நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக விளையாட்டுப் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. இவ் வருடம் இதற்கான வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி – புள்ளநாயகம் அவர்கள் விளையாட்டுக்குப் பொறுப்பானவர்களுக்கு வழங்கியிருந்தார்.
இந்த வகையில் கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகள் மிகவும் எளிமையானமுறையில் மாணவர்களின் திறன்களை வெளிக்கொணரும் முகமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. பட்டிருப்பு கல்வி வலயத்தில் நடைபெறும் இவ் ஆரம்ப வைபத்தினை பட்டிருப்பு கல்வி வலயத்தின் உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.த.இதயகுமார் ஒழுங்கமைத்திருந்தார்.
இன்றைய தினம் பூப்பந்து பெருவிளையாட்டு மட்/பட்/குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.