முனைத்தீவு சக்தி மகா வித்தியாலயத்தில் ஆலோசனை வழிகாட்டல் அலகு திறந்து வைப்பு(சித்தா)

மட்/பட்/முனைத்தீவு சக்தி மகா வித்தியாலயத்தில் 'ஆலோசனை வழிகாட்டல் அலகு' பாடசாலை அதிபர் திரு.சு.உதயகுமார் அவர்களினால் 27.09.2022 இன்று திறந்து வைக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களுக்கு ஆலோசனையும் வழிகாட்டலும் இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகின்றது. மாணவர்களுக்குப் பொருத்தமான ஆலோசனைகளையும் அதற்கான வழிகாட்டல்களையும் மேற்கொள்ள வேண்டுமாயின் அதற்கான தனியான அலகுடன் பொருத்தமான சூழ்நிலையும் காணப்படுதல் வேண்டும். 

இதுவரை பாடசாலையில் காணப்பட்ட வளங்களின் அடிப்படையில் ஆலோசனையும் வழிகாட்டலும் முன்னெடுக்கப்பட்டது. இன்று பொருத்தமான சூழலைக் கொண்டதாக அதற்கான 'ஆலோசனை வழிகாட்டல் அலகு'  திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆலோசனை வழிகாட்டல் ஆசிரியர் திருமதி கீதா – ரமேஸ் அவர்களின் முயற்சியினால் 'ஆலோசனை வழிகாட்டல் அலகு' முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.