மட்டக்களப்பில் சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட் சந்தை

(சிஹாரா லத்தீப்)

எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படாதிருக்க உற்பத்திகளை ஊக்கு விக்கும் அரசாங்கத்தின் ஏற்பாட்டுக் அமைய சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தவும் தொழிலாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு இலகுவான சந்தை வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் .கொடுப்பதற்காகவும் இளைஞர் விவகார விளையாட்டு மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சு தற்பொழுது புதிய திட்டங்களை அமுல் நடத்தி வருகிறது.

இந்த நடவடிக்கைக்கமையக சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட் களை காட்சிப்படுத்தி இலகுவான சந்தை வசதி ஏற்படுத்திக் கொடுக் கும் விசேட கண் காட்சிகள் தற்பொழுது மாவட்ட மட்டத்தில் நடை பெற்று வருகின்றன இந்த ஏற்பாட்டுக்கமைய .மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறு தொழில் முயற்சி யா ளர் களைஊக்குவிக்கும் பொருட்டு . மாவட்ட முயற்சியாண்மை கண்காட்சி மாவட் டத் தில் உள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் . நடத்தப்பட்டு வருகிறது.

.இளைஞா் விவகார அமைச்சின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் . ஏற் பாட்டில் . மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகர னின் வழிகாட் டுதலில் இக்கண்காட்சியில் தற்பொழுது பிரதேச செயலர் பிரிவு மட்டத் தில் நடாத் தப்பட்டு வருகின்றன இதற்கமைய மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்பிரிவு சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி கண்காட்சி மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. வாசுதேவன் தலைமையில் நடை பெற்ற இந்த கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் . மாவட்ட அரசாங்க அதிபர் கருணா கரன் பிர தம அதிதியாக கலந்து கொண்டு . கண்காட்சியை அங்குரார்ப்பணம் செய்து வைத் தார். இந்த உற்பத்தி கண்காட்சியில் பனம் பொருள் உற்பத்தி, நெசவுக் கைத் தொழில் உற்பத்தி, போசாக்கு உணவு உற்பத்தி பொருட்கள் மற்றும் விவசாய உணவு உற்பத்திபொருட்கள்பலவும் இங்குகாட்சிப் படுத்தப்பட்டிருந்தன.

இதற்கு மேலாக இலகுவாக உயிர்வாயு .மற்றும் இயற்கை உரங்கள் தயாரித்தல் . பற்றிய போதனை விளக்கங்களும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த சிறு தொழில் முயற்சியாளர்கள் . உற்பத்தி கண்காட்சியை மட்டக்களப்பு மாவட்ட செய லகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு ஏற்பாடு செய்திருந்தது . இந்த விற்பனை கண்காட்சியில் இலகுவாக மக்கள் உற்பத்திப் பொருட்களை கொள் வனவு செய்ய முடிந்ததுடன் ஏனைய உற்பத்திக்கான அனுபவங்கள் பற்றிய படிப் பினைகளையும் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.