ஜப்பான் இலங்கைக்கு இடையே கைச்சாத்தான ஒப்பந்தம்!

பிளாஸ்டிக் முகாமைத்துவ திறன் அபிவிருத்தி´ திட்டம் தொடர்பான ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் (JICA) சுற்றாடல் அமைச்சுக்கும் இடையிலான ஒப்பந்தம் நேற்று (29) சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் கலாநிதி அனில் ஜாசிங்க மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் இலங்கைத் தலைவர் டெட்சுயா யமடா ஆகியோருக்கு இடையில் அமைச்சில கைச்சாத்திடப்பட்டது.

இந்நிகழ்வில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர், பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இத் திட்டம் 2023 ஆம் ஆண்டில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது 03 வருட திட்டமாகும். இதன் கீழ் மத்திய சுற்றாடல் அதிகாரசபையில் பிளாஸ்டிக் முகாமைத்துவ நிலையம் ஒன்று நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் ஊடாக பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான திறன் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.