பிரபல சமூக செயற்பாட்டாளர் பரம சிங்கம் கோர விபத்தில் பலி!

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு பொலன்னறுவை பிரதானவீதி செவணப்பிட்டி பகுதியில் கனரக வாகனம் வான் ஒன்றும் இன்று புதன்கிழமை (29) நேருக்கு மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு , ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கனரக வாகன சாரதி கைது செய்துள்ளதாக  வெலிகந்தை பொலிசார் தெரிவித்தனர்.

தம்பட்டை பிரதானவீதி திருக்கோவிலைச் சேர்ந்தவரும் அக்கரைப்பற்று சுவாட் நிறுவனத்தின் நிருவாக தலைவருமான 46 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான வடிவேல் பரமசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் அக்கரைப்பற்று சுவாட் நிறுவனத்தில் நிருவாக தலைவராகவும் சிவில்சமுககூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பதிகாரியாகவும் இருந்து பல அளப்பரிய தொண்டாற்றியவராவார்.

அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வானும் பொலன்னறுவையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி சென்று கனரக வாகனமும் சம்பவதினமான அதிகாலை 2 மணிக்கு செவணப்பிட்டி சிரிகம பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வானில் பிரயாணித்த ஒருவர் உயிரிழந்ததுடன் சாரதி படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையவல் அனமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கனரக வாகன சாரதி கைது செய்யப்பட்டதுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்தை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.