கல்முனை பற்றிமாவில் சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதிப் பதக்கப் பரீட்சிப்பு





(சித்தா)

சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதிப் பதக்கப் பரீட்சிப்பு 16.10.2023, 17.10.2023 ஆகிய இரு தினங்களும் கமு/கமு/கார்மேல் பற்றிமா கல்லூரியில் 8.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதிப் பதக்கப் பரீட்சிப்புக்காக கமு/கமு/கார்மேல் பற்றிமா கல்லூரியில் இருந்து மூன்று மாணவர்களும் கமு/கமு/உவெஸ்லி உயர்தரப் பாடசாலையிலிருந்து மூன்று மாணவர்களும், கமு/கமு/பாண்டிருப்பு மகா வித்தியாலயத்திலிருந்து இரண்டு மாணவர்களும் கமு/கமு/பெரியநீலாவணை விஸ்ணு மகா வித்தியாலயத்திலிருந்து ஒரு மாணவருமாக் ஒன்பது மாணவர்கள் தோற்றியிருந்தனர்.சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதிப் பதக்கப் பரீட்சிப்புக்கு தோற்றுவதற்கு இவ்  மாணவர்களை வழிப்படுத்தி, நெறிப்படுத்தி தேவையான போது களத் தரிசிப்புகளை மேற்கொண்டு பெற்றோருடனும், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உத்தியோகஸ்த்தர்களுடன் இணைந்து சேவையாற்றிய சுற்றாடல் முன்னோடி மாவட்ட இணைப்பாளர் பு.செவ்வேட்குமரன் அவர்களின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும்.

மத்திய சுற்றாடல் கல்விப் பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.சிவகுமார், சுற்றாடல் அதிகார சபை பத்திரமுல்ல, திலினி விக்ரமசிங்க, பிரதிக் கல்விப் பணிப்பாளர், கல்வி அமைச்சு, இசுறுபாய, வி.ஜெகதீசன், அம்பாரை மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர், திருலோகச்சந்திரன் சிரேஸ்ட சுற்றாடல் அலுவலர், மத்திய சுற்றாடல் அதிகார சபை, பத்தரமுல்ல ஆகியோர் சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதிப் பதக்கப் பரீட்சிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

மேற்படி பரீட்சிப்பு நடைபெறுவதற்கு அதிபர் வண.சகோ.றெஜினோல்ட்,பிரதி அதிபர் மற்றும் சுற்றாடல் முன்னோடிக் கழக பொறுப்பாசிரியர்  ஆகியோர் ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர்.