அதன்படி, மே 30, மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்களை மூடுவதற்கும், பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி விற்பனையை நிறுத்துவதற்கும், சூதாட்ட நிலையங்கள், கேசினோக்கள், மதுபானசாலைகள் மற்றும் இரவு விடுதிகளை மூடுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
'சம்பத்தத்வ ஜயந்தி'யை முன்னிட்டு நடத்தப்படும் 2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் விழாவை ஒட்டி, மே 27 முதல் ஜூன் 2 வரை வெசாக் வாரம் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.













