நாரஹேன்பிட்டிய தலைமை அலுவலகம் மற்றும் நாடு முழுவதுமுள்ள மாவட்ட கிளைகளில் சுமார் 100,000 இலக்கத் தகடுகள் இருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் வசிப்பவர்கள் நாரஹேன்பிட்டிய பிரதான அலுவலகத்தில் இலக்கத் தகடுகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஏனைய மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இலக்கத் தகடுகளை அந்தந்த மாவட்ட செயலகங்களில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள கிளைகளில் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்தத் தகடுகளை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம் , இதனைத் பெற்றுக்கொள்ள தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில் நிர்வாக ரீதியான தாமதங்கள் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் இலக்கத் தகடு பிரிவை 011-2033333 எனும் இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொள்ளலாம்.







.jpg)


.jpeg)

.jpeg)
