அம்பாறையில் கிராமப்புறங்களில் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்திலுள்ள பின் தங்கிய கிராமப்புறங்களிலுள்ள இளைஞர் யுவதிகளின் விளையாட்டுத் திறமையினை அடையாளம் கண்டு அவர்களை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக "திகாமடுல்ல கிறிடா நவோதயம்' எனும் வேலைத்திட்டமொன்று

முன்னெடுத்துச் செல்லப்படவுள்ளது.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் ஏற்பாட்டில் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ள இத் திட்டத்திற்கு அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகப் பிரிவிலிருந்தும் திறமையான விளையாட்டு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு விளையாட்டு சார் திறமையான பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

கிராமப்புறங்களில் திறமையான விளையாட்டு வீர,வீராங்கனைகள் பலர் இருந்தும் அவர்களின் வறுமை நிலை காரணமாகவும் மைதானம் மற்றும் பயிற்சியாளர்கள் இல்லாமையினாலும் தமது திறமைகள் அப்படியே மழுங்கடிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தன.
இளைஞர், யுவதிகளுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்படும் போது,தமது திறமை மூலம் தேசிய மட்டத்திற்கு உயர்வடைந்து நாட்டுக்கும், பிரதேசத்திற்கும் பெருமை சேர்க்க முடியுமென சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்