மட்டு.மாவட்டத்தில் ஏற்படும் மின்தடையால் பரிட்சைக்கு தயாராகும் மாணவர்கள் பெரும் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தினமும் ஏற்படும் மின்சாரத்தடை காரணமாக பரீட்சைகளுக்குத்தயாராகும் மாணவர்கள், மற்றும் ஏனையோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
எதிர்வரும் 8ஆம் திகதி; கல்விப் பொதுத்தராதர உயர் தரப்பரீட்கைளும் 21ஆம் திகதி தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையும் ஆரம்பமாகவுள்ளன.
இப்பரிட்சைகளை எதிர்கொள்ள தயாராகும் மாணவர்களுக்கு இம்மின்வெட்டு காரணமாக தமது பரிட்சைக்கான மீட்டல் நடவடிக்கைகளை தொடரமுடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
எனவே இவ்விடயம் தொடர்பில் சம்மபந்தப்பட்டவர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.