மட்டக்களப்பு தாண்டவன்வெளி காணிக்கை மாதா ஆலய கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரத்ததான முகாம் ஒன்று நடத்தப்பட்டது.
தேவாலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை கிலெமென்ற் வி. அன்னதாஸ் அடிகளாரின் நடைபெற்ற இவ் இரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இரத்ததானம் செய்தனர்.
இதன் போது, இரத்ததானம் செய்தவர்களுக்கு தாண்டவன்வெளி கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தினரால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இரத்தவங்கியின் இரத்தத் தேவைகள் குறித்து விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பேரில் இந்த இரத்ததான முகாம் ஏற்பர்டு செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள், இரத்த வங்கியினர் இந்த இரத்ததான முகாமில் கலரந்து கொண்டு இரத்தம் சேகரித்தனர்.





.jpg)






