உயர்தரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வின்சட் மாணவி சாதனை


(கிருஸ்ணா)

மட்டக்களப்பு வின்சட் உயர்தர தேசிய பாடசாலையின் மாணவி விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதல் இடத்தைப்பெற்று சாதனைபடைத்துள்ளார்.

கிழக்குப்பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் சூரியகுமாரனின் மகளான சோபனா என்ற மாணவியே மூன்று பாடங்களிலும் ஏ தரச்சித்தியைப்பெற்று மாவட்டத்தில் முதல் நிலையையும் தேசிய மட்டத்தில் 55வது இடத்தினையும் பெற்றுள்ளார்.

உத்தியோகபூர்வமற்ற தகவலின் அடிப்படையில் வின்சட் உயர்தர தேசிய பாடசாலையில் இருந்து 07பேர் வைத்தியதுறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் 04பேர் பொறியியல் துறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக வின்சட் உயர்தர தேசிய பாடசாலையின் முதல்வர் திருமதி கனகசிங்கம் தெரிவித்தார். இதன் அடிப்படையில் பாடசாலையில் மொத்தம் ஏழு பேர் மூன்று பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதேபோன்று பொறியியல் துறையில் ஆனந்தராசா விதுஷா என்ற மாணவி மாவட்ட மட்டத்தில் மூன்றாவது நிலையை பெற்றுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார். இன்னும் முழுமையான புள்ளி விபரங்கள் கிடைக்கவில்லையெனவும் அவை கிடைக்கும்போது உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.

புனித மைக்கல் (st michael) கல்லூரி மாணவன் மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் இரண்டாமிடம்

இராமகிருஷ்ண பாடசாலை மாணவி அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் , இலங்கையில் 4 வது இடம்