கிழக்கு
மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இன்று
12-03-2014 தொடக்கம் 31-03-2014 வரையான காலப்பகுதியில் மின்சாரத் தொகுதிகளின்
பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப்பணிகளின் பொருட்டு மேற்கொள்ளப்படவுள்ள
பகல்நேர மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்கள் இலங்கை மின்சார சபையின் அம்பாறை பிராந்திய
மின் பொறியியலாளர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி கிழக்கு
மாகாண மின் பாவனையாளர்கள் தமது பிரதேசங்களில் அமுல்படுத்தப்படவுள்ள மின்வெட்டு
தொடர்பான விபரங்களை குறிப்பிட்ட அலுவலகத்தின் தொலைபேசி இலக்கமான 063 2222078
அல்லது 063 2222387 இற்கு அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.