றோமன் கத்தோலிக்கர்களினால் தேவ அழைத்தல் தினத்தையொட்டி மறை மாவட்டத்தினரால் கலை கலாசார மற்றும் தேவனின் மெய்யுணர்வையும், நம்பிக்கையும் வெளிப்படுத்தும் நடன நாட்டியங்கள் இன்று தாணடவன்வெளி பேர்டினன்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றன.
புனித திருச்சிலுவைக் கன்னியர்கள், நல்லாயன் கன்னியர்கள், திருக்குடும்பக் கன்னியர்கள், சொமஸ்கான் கன்னியர்கள் மற்றும் அருட்தந்தையர்கள்;, ஏழைகளின் சிறிய கன்னியர்கள், ஜேசு சபை அருட்தந்தையர்கள்;, மறைமாவட்ட அருட்தந்தையர்கள் ;, அப்பஸ்டோலிக் காமல் கன்னியர்கள், பிரன்சிஸ்கன் சகோதரிகள் தங்களது கலை கலாசார நிகழ்வுகளை நடாத்தினர்.
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா, அருட்தந்தையர்களான ஏ. தேவதாசன், ஹிருதயதாஸ், துறவற குருத்துவ சபையினர், மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மறை ஆசிரியர்கள், மறைக் கல்வி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





.jpg)






