(சித்தாண்டி நித்தி) இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் தற்போதைய அரசியல் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் தாயகத்தலை மகன் எனும் பட்டம் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி இன்று (27) கல்லடி துளசி மண்டபத்தில் நடாத்திய வரவேற்பு வைபவத்தின் போதே அவர் தாயகத்தலை மகன் எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தமிழரசுக் கட்சியின் உப தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன். செல்வராசா வாழ்த்துப் பத்திரம் வாசித்து கிரீடத்தை சூட்டி இந்தப்பட்டத்தை வழங்கி கௌரவித்தார்.
புதிய தலைவர் மாவை சேனாதிராஜா கட்சியின் புதிய பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சட்டத்தரணி கே.துரைராஜசிங்கம் ஆகியோரும் இதன் போது பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து வாழ்த்துப்பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் வாழத்துப்பத்திரத்தையும் புதிய பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கத்துக்கான வாழத்துப்பத்திரத்தை நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் வழங்கி வைத்தனர்.
இந்த வைபவத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா மற்றும் பி.அரியநேந்திரன்இ சி.யோகேஸ்பரன் எஸ்.சரவணபவன் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
தாயகத் தலைமகன் எனும் பட்டம் சூட்டப்பட்டது தொடர்பாக இலங்கை தமிழரசுக்கட்சியின் ஊடாக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அரியநேந்திரம் பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்.



.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


.jpg)







.jpg)