களுவாஞ்சிகுடி பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த இந்நிலையில் திங்கட்கிழமை (03) களவாடப்பட்ட பொருட்களையும், சந்தேகத்தின் பெயரில் யுவதி ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களையும், கைது செய்யப்பட்ட யுவதியையும் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வெளிமாவட்டத்திலிருந்து அக்குறித்த வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த யுவதியே இவ்வாறு சந்தேகத்தின் பெயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரதீப் களுபாலவின் வழிகாட்டுதலில், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் லலித் லீலாரெத்னவின் பணிப்புரைக்கமைய, களுவாஞ்சிகுடி பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பத்திகாரி ஆர்.யூட் றொமேஸின் நேரடிக் கண்காணிப்பில், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி ஜே.பி.ஜோய், உள்ளிட்ட குழுவினர் இந்நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.









.jpg)



.jpg)
