
இந் நிகழ்வு கடந்த 25.4.2015(சனிக்கிழமை) மாலை லண்டனில்அதன் தலைவர் நா.சதானந்தம் தலைமையில் நடைபெற்றது. இதில் பெருமளவான களுவாஞ்சிகுடி கிராமத்து உறவுகளும்,ஏனைய உறவுகளும் கலந்து கொண்டனர்.இவ் விழாவிற்கு பிரதம விருந்தினராக the worshipful mayor of harrow councillor AJAY MARUஅவர்களும், சிறப்பு அதிதியாக DR.S.சலாக்கியநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
முதலாவது நிகழ்வாக சங்கத்தின் வளச்சிக்கா உழைத்து காலம் சென்ற உறுப்பினர்களின் ஞாபகார்த்தமாக ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து,மங்கள விளக்கினை திருமதி புவனேஸ்வரி சோமநாதன் அவர்களும்,திருமதி.இராஜேஸ்வரி அரசகேசரி அவர்களும்,மற்றும் ஏனைய பிரமுகர்களும் ஏற்றி வைக்க தேவாரத்தினை திருமதி.பிறேமினி நல்லதம்பி அவர்கள் பாடினார்.
தொடர்ந்து தமிழ்மொழி வாழ்த்துப் பாடலுக்கான நடனத்தினை செல்வி.சஞ்சிகா சிவாகரன் ஆடினார்.அதனை அடுத்து,செல்வி.கயூறிகா ஞானரெட்ணம் அவர்களின் தமிழ் பேச்சும் ,"சுபாலயா" வழங்கிய சிறிமதி.ரூபா பாலசிங்கம் அவர்களின் மாணவர்கள் கலந்து கொண்ட வாய் பாட்டு,வயலின் இசை என்பன வந்தோரை மகிழ்வித்தது.
தொடர்ந்து "நாட்டிய ஷேத்திரா"வழங்கிய சிறிமதி சாந்தி தயாபரன் அவர்களின் மாணவர்கள் கலந்து சிறப்பித்த நடன நிகழ்வும்,சிறிமதி.சுஜித்தா ஆனந்த் அவர்களின் மாணவர்கள் கலந்து சிறப்பித்த நடன நிகழ்வும் சபையோரின் பெருவரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து,விசேட நிகழ்ச்சியாக திரு.எஸ்.சிறிபதி அவர்களின் மயாஜால நிகழ்வு அனைவரையும் வியக்க வைத்தது.அதனை தொடர்ந்து திஜான் குழுவினரின் நடனமும்,திரு.திருமதி உதயகுமார் அவர்களின் பழைய பாடலுக்கான அபிநய நடனமும் சிறப்பாக இருந்தது.மொத்தத்தில் அனைத்து நிகழ்வுகளும் அனைவரையும் மகிழ்வித்தது.
தொடர்ந்து அனவருக்கும் இராப்போசன விருந்து வழங்கப்பட்டு அனைத்து ஊர் உறவுகளும்,உரையாடி,உறவாடி,மகிழ்ந்து விடைபெற்றனர்.