புன்னைச்சோலை சேமக்காலை வீதி 4ம் குறுக்கு வீதியில் சம்பவ தினமான நேற்று(13) இரவு குறித்த வீட்டில் அனைவரும் ஆழ்ந்த நித்திரையில் இருந்துள்ளனர். இதன் போது வீட்டின் சமையலறை பகுதி கதவை உடைத்து வீட்டுக்குள் உள்நுழைந்த திருடர்கள் அங்கு அறைகளில் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 20 லட்சத்து 80 ஆயிரம் ரூபா பணம் மற்றும் சுமார் 33 அரை பவுன் கொண்ட தங்க ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசார் தடவியல் பிரிவு பொலிசார் அழைக்கப்பட்டு தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.