ஜோசப்வாஸ் அடிகள் புனிதராக திருநிலைப் படுத்தப்பட்டதை முன்னிட்டு மட்டக்களப்பில் ஊர்வலம்

(சிவம்)

பாப்பாண்டவரால் ஜோசப்வாஸ் அடிகள் இலங்கையின் முதல் புனிதராக திருநிலைப் படுத்தப்பட்டதை முன்னிட்டு கொண்டாடும் ஊர்வலம் மட்டக்களப்பு நகரில் இன்று நடைபெற்றது.

தாண்டவன்வெளி புனித ஜோசப்வாஸ் வித்தியாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஊர்வலம் தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்திலிருந்து ஆரம்பமாகி திருமலை வீதி, லொயிட்ஸ் அவனியு, வை;எம்.சி.ஏ விதி வளியாக வித்தியாலயத்தை வந்தடைந்தது.

இவ் ஊர்வலத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா, தேவாலய பங்குத் தந்தை அலெக்ஸ் றொபட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அண்மையில் பாப்பாண்டவர் கொழும்பிற்கு விஜயம் செய்து ஜோசப்வாஸ் குருவானவரை இலங்கையின் முதலாவது புனிதராக திருநிலைப் படுத்தியமை குறிப்பிடத்தக்கது.