(சிவம்)ஜோசப்வாஸ் அடிகள் இலங்கையின் முதல் புனிதராக திருநிலைப் படுத்தப்பட்டதை முன்னிட்டு நன்றி செலுத்தும் கூட்டுத் திருப்பலி தாண்டவன்வெளி புனித ஜோசப்வாஸ் வித்தியாலய வளாகத்தில் இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜோசப் பொன்னையா, தாண்டவன்வெளி காணிக்கை மாதா தேவாலயத்தின் பங்குத் தந்தை அலெக்ஸ் ரொபின்சன், மறை மாவட்ட குரு முதல்வர் ஏ. தேவதாசன் ஆகியோர் கூட்டத் திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.
இவ ஆராதனையில்; மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா, அருட் சகோதரிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது புனிதரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்து.
அண்மையில் கொழும்பிற்கு விஜயம் செய்த பாப்பாண்டவர் ஜோசப்வாஸ் அடிகளாரை இலங்கையின் முதலாவது புனிதராக திருநிலைப் படுத்தியமை குறிப்பிடத்தக்கது.














.jpg)






