களுவாஞ்சிகுடியில் ஓய்வு பெற்ற அதிபர் த.கனகசூரியத்திற்கு பாராட்டு

(SITHTHA)
மட்/களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயத்தில் 2003 ஆம் ஆண்டிலிருந்து அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற திரு.தம்பிப்பிள்ளை- கனகசூரியம் அவர்களின் சேவையினைப் பாராட்டுமுகமாக கிராமத் தலைவர் திரு.அ.கந்தவேள்  தலைமையின் கீழ் களுவாஞ்சிகுடி இராசமாணிக்க மண்டபத்தில்  களுவாஞ்சிகுடி கிராம மக்களால் பாராட்டு விழா விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ் விழாவில் கிராம முன்னேற்றச் சங்கங்கள்> விளையாட்டுக் கழகங்கள்> பழைய மாணவர்கள்> நலன்விரும்பிகள் ஆசிரியர்கள்> மாணவர்கள்> என பலர் கலந்துகொண்டு ஓய்வு பெற்ற அதிபர் திரு.தம்பிப்பிள்ளை கனகசூரியம் அவர்களுக்கு அவரின் சேவையினைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா பாடி தங்களது நன்றியினைத் தெரிவித்தனர்.