
(படுவான் பாலகன்) தமிழ்தேசிய
கூட்டமைப்பின் அவுஸ்ரேலியா விக்டேரியா கிளையின் அனுசரணையில் முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்களின் ஏற்பாட்டில்
படையாண்டாவெளி மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு
இன்று(20) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
நீதி
உயர்ந்த மதி கல்வி அன்பு நிறைய உடையவர்கள் மேலோர், ஒருமித்த ஆதரவுடன்
உதவிக்கரம் கொடுப்போம் என்ற தொனிகள் அச்சிடப்பட்ட அப்பியாசக் கொப்பிகளே
வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.