ஓந்தாச்சிமடம் ஸ்ரீ கற்பக விக்னேஸ்வரர் வருடாந்த மஹோற்சவம்

(ரவிப்ரியா)
மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் ஸ்ரீ கற்பக விக்னேஸ்வரர் 10 முத்தமாரியம்மன் தேவஸ்தான, ஸ்ரீகற்பக விக்னேஸ்வரர் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 15ந் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்தடன் ஆரம்பமாகி 24ந் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறும்.

கிராம மக்களால் நடாத்தப்படும் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 2ம் நாள் திருவிழா கட்டாடி குடிமக்களாலும் 3ம் நாள் திருவிழா சும்மாகட்டு மக்களாலும், 4ம் நாள் திருவிழா பதஞ்சலி குடிமக்களாலும், 5ம் நாள் திருவிழா சிங்கள குடிமக்களாலும், 6ம் நாள் திருவிழா கரைக்காட்டு வேளாளர் கடலரசன் குடி மக்களாலும், 7ம் நாள் திருவிழா சங்கரப் பக்தன் குடிமக்களாலும். 8ம் நாள் சப்பரத் திருவிழா சூரிய அடப்பன் குடி மக்களாலும் 9ம் நாள் தெப்பத் திருவிழா தேவஸ்தா தலைவர் மு.விஸவநாதனாலும், 10 நாள் தீர்த்தோற்சவம் கிராமக்களாலும், 11ம் நாள் பூங்காவனத் திருவிழா இந்து இளைஞர் மன்றத்தாலும், கிராம மக்களால் நிறைவு வைரவ பூஜையும் நடைபெறும்.

உற்சவ காலங்களில் அதிகாலை 5.00மணிக்கு ஸ்நபனா அபிஷேக பூஜையும், அதைத் தொடர்ந்து யாஹ பூஜை, தம்ப பூஜை, தக்பலி, வசந்த மண்டபப் பூஜை, திருவுலா நடைபெற்று, மாலை 5.00 மணிக்கு யாக பூஜை நித்திய பூஜை, தம்ப பூஜை, திக்பலி வசந்த மண்டப பூஜை, சுவாமி வீதி உலா வருதல் என்பன இடம் பெறும்
கிரியைகளை சிவஸ்ரீ மு.கு. சச்சிதானந்தக் குருக்கள் அவர்கள் தலைமையில், ஸ்ரீ மத்துமாரியம்மன் ஆலய பிரதம குருக்கள் விஸ்வபிரம்மஸ்ரீ ஏ.குமாரலிங்கமும் இணைந்து மேற் கொள்வர்.