மட்டக்களப்பு பாலமீன்மடுவில் படகிலிருந்து வாவிக்குள் வீழ்ந்து 22 வயது இளைஞர் உயிரிழப்பு


மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு பகுதியில் வாவியில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு முகத்துவாரம் ஊடாக கடலுக்கு மீன்பிடிக்கச்சென்று மீண்டும் மட்டக்களப்பு வாவிக்குள் வந்த படகிலிருந்து வீழ்ந்து 22வயது இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடலுக்குள் இருந்து வாவிக்குள் படகு வந்ததும் படகில் பொருத்தப்பட்டிருந்த இயந்திரத்தின் கயிறு அறுந்து வீழ்ந்த நிலையில் தடுமாறு இளைஞர் வாவிக்குள் வீழ்ந்துள்ளார்.

இரண்டு மணி நேரமாக குறித்த இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சடலம் மீனவர்களினால் மீட்கப்பட்டது.

மண்முனை வடக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி அகமட் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்கான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரரணைகளை கொக்குவில் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.