வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வித்தியாலய அதிபர் ச.கணேசமூர்த்தி தலைமையில் இன்றைய (08.03.2016) காலை ஒன்றுகூடலில் இடம்பெற்ற நிகழ்வில் மகளிரான மாணவிகளும், ஆசிரியைகளும் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது இவர்களை கற்கண்டு வழங்கி வரவேற்றதுடன் அதிபர், ஆசிரியர்களால் மகளிர் தின உரைகளும் நிகழ்த்தப்பட்டு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தின் சிறப்பும், அதன் முக்கியத்துவமும், பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் அதனை வெற்றி கொள்ளும் வகைகளும் பற்றிய அதிபரின் உரையைத் தொடர்ந்து திருமதி றீ.கலைச்செல்வன் ஆசிரியையால் ஏற்புரையும், நன்றியுரையும் நிகழ்த்தப்பட்டது.