ஓந்தாச்சிமடம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழாவில் விநாயகப் பானை எழுந்தருளப் பண்ணும் நிகழ்வு


(சிவம்)

ஓந்தாச்சிமடம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழாவின் இறுதிநாளான இன்று திங்கட்கிழமை (02) அம்பாளின் பூரண கும்பம் நிறுத்துதல், விநாயகப் பானை எழுந்தருளப் பண்ணல் மற்றும் காத்தான் கன்னிமார் வைத்தல் இடம்பெற்றன.

அம்பாளுக்கு நேர்கடன் வைத்திருந்த அடியவர்கள் அங்கப் பிரதட்சணம் மற்றும் ஆலய வளாகத்தில் பொங்கலிட்டு தங்கள் நேர் கடன்களை நிறைவேற்றினர்.

ஆலயத்திற்கு வருகை தந்த அடியவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தினமும் அன்னதானமும் தற்போது வெப்பநிலை அதிகமாகக் காணப்படுவதனால் தண்ணீர்ப்பந்தல்கள்; அமைக்கப்பட்டு குளிர்பானங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதம குரு விஸ்வப்பிரம்ம ஸ்ரீ ஏ. குமாரலிங்கம் குரு, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு.கு. சச்சிதானந்தக் குருக்கள் ஆகியோர் கிரியைகளை நிறைவேற்றினர்.