மட்டக்களப்பு நாவலடி கடல்நாச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு நாளை ஆரம்பம் !!

ஆழி சூல்  இலங்கை திருநாட்டில் கிழக்கு மாகாணத்தின் மீன்பாடு தேனாடாம்  மட்டுமாநகரின் நாவலடி பதியில் நீர்வளமும் நில வளமும்  பொருந்திய இயற்க்கை  அழகுடன் காட்சி தரும் நாவலடி ஸ்ரீ மாரி கடல் நாச்சி  அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு நாளை  இரவு திருக்கதவு  திறக்கும் வைபவத்துடன்  மிகவும் கோல காலமாக ஆரம்பமாகவுள்ளது  .

கோரத் தாண்டவமாடிய ஆழிப் பேரலை  சுனாமியில்  பல  உயிர்களை காவு கொண்ட   கிராமங்களில்  இந்த நாவலடி கிராமம் மிக முக்கியமாக பேசப்பட்ட கிராமமாகும் .

இன்றும் இந்த கிராமம்  எல்லோராலும்  பேசப் படுவதன் காரணம் இங்குள்ள ஆச்சி கடல் தாய் என்பது பல கோடி பக்கதர்களின் குறைகளை தீர்ப்பதில் மிகவும் பிரசித்தி வாய்ந்த  ஆலயமாக இது விளக்குகிறது.

 சக்தி விழா நிகழும்  துர்முகி  வருடம் வைகாசி  திங்கள் 31 ம் நாள் 13.6.2016 திங்கள் கிழமை  நவ மித்திதியும்  உத்தர நட்சத்திரமும் கூடிய  சுப தினமான நாளை  மாலை 6 மணியளவில்  அம்மனின்  திருக்கதவு  திறக்கும்  வைபத்துடன்  ஆரமபமாகி  20.06 2016 ஆனித் திங்கள் 6 ம் நாள் திங்கள் கிழமை  காலை 6 மணியளவில் அம்மனின் பூரண  கும்பம் சொரிதளுடன் இனிது  நிறைவு பெறவுள்ளது.

சடங்கு   காலங்களில்  அம்மனின் பூசைகள் மதியம்  இரண்டு மணிக்கும்  இரவு நேர  பூசைகள்  10.30 மணிக்கும் இடம்பெறும்.என்பது  குறிப்பிடத் தக்கது.