(படுவான் பாலகன்) முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நேற்றும்(02) இன்றும்(03) நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக்கழகம் முதலிடத்தினை பெற்றுக்கொண்டது.
விநாயகர் விளையாட்டுக்கழகத்தின் 55வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டியில் 24கழகங்கள் பங்கேற்று இறுதிச்சுற்றுப்போட்டிக்கு அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக்கழகமும், முதலைக்குடா விநாயகர் அணியினரும் தெரிவாகி தண்டணை உதை மூலம் அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று முதலிடத்தினை பெற்றுக் கொண்டது.
போட்டியில் முதல் நான்கு இடங்களையும் பெற்றுக்கொண்ட கழகங்களுக்கு கிண்ணங்களும், பணப்பரிசும் மேலும் சிறந்த விளையாட்டு வீரன், சிறந்த பந்துக்காப்பாளர் போன்றோருக்கும் கிண்ணங்கள் வழங்கப்பட்டது.
உதைபந்தாட்டப்போட்டியின் இறுதி நிகழ்வு இன்று(03) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற போது இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர், பாடசாலை அதிபர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.







.jpg)
.jpg)

.jpg)


.jpg)
