(அரசையூர் சு.சிறிகரன்)
மீனினம் இசைபாடும் மட்டுநகர் வாவிக்கு தென் மேற்கு தென்றல் தாலாட்ட தெம்மாங்கு பட்டொலிக்க நெற்கதிர்கள் தலையசைக்க பாலோடு தேனும் பலவகைத் திரவியங்களோடு செந்தாமரைமலர்கள் சிறப்புற்று விளங்கும் சீர்பதியாம் அரசடித்தீவின் கன்னாக கோயில் கொண்டு அடியார்களுக்கு இடுகண் களைந்து இன்னல்கள் நீக்கி இஷ்ட சித்திகளை விழங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீ விக்னேஷ்வரப் பெருமானுக்கு அலங்கார உற்சவம் நிகழும் துர்முகி வருடம் ஆவணித்திங்கள் 18நாள் (03.09.2016)ம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகி ஆவணித்திங்கள் 21நாள் (06.09.2016)ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெறும்.
கிரியாகால விபரம்
03.09.2016 சனிக்கிழமை 01 நாள் திருவிழா - பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமாகி , தொடர்ந்து நவன கும்ப பூசையும், அலங்கார பூசையும் சுவாமி வீதி உலாவருதலும் இடம் பெறும்.
04.09.2016 ஞாயிற்றுக்கிழமை 02 நாள் திருவிழா - மாலை 06.00 மணிக்கு நவன கும்ப பூசையும்,அலங்கார பூசையும், சுவாமி வீதி உலாவருதலும் இடம் பெறும்.
05.06.2016 திங்கட்கிழமை 3ம் நாள் திருவிழா - அன்று விநாயகர் சதுர்த்தி விரதத்தினை முன்னிட்டு அரசடித்தீவு ஸ்ரீ முத்துலிங்கப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து முற்பகல் 10.00 மணிக்கு பாற்குடப்பவனி இடம்பெறும். தொடந்து
விக்னேஷ்வரப் பெருமானுக்கு சங்காபிசேகம் நடைபெறும். மாலை 07.00 மணிக்கு திருவிளக்கு பூசையும், அலங்கார பூசையும், சுவாமி வீதி உலாவருதலும் மிக சிறப்பாக இடம் பெறும்.
06.09.2016 செவ்வாய்க்கிழமை - அதிகாலையில் திருப்பொற்சுண்ணம் இடம்பெற்று, தீர்த்தோற்சவத்துடன் இனிது நிறைவு பெறும்.
திருவிழாக்காலங்களில் கதாப்பிரசங்கம்,
பஜனைப்பாடல்கள், மேள வாத்தியம் என்பன இடம் பெறும்.
அனைவரும் வருக! இறையருள் பெறுக!
இவ்வண்ணம் அழைக்கின்றனர் ஸ்ரீ விக்னேஷ்வரர் ஆலய பரிபாலன சபையினரும், கிராம மக்களும்.
சுபம்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4





.jpg)
.jpg)
.jpg)


.jpg)

