(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச அபிவிருத்தி இணைப்புக்குழு கூட்டம் நேற்று(12) புதன்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இணைத்தலைவர்களின் தலைமையில் பிற்பகல் 02.00மணிக்கு நடைபெற்றது.
இதன்போது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், விளையாட்டு அமைச்சு, மாகாண உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டு வேலைத்திட்டம், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் போன்றவற்றின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கான வேலைத்திட்டங்கள் நிறைவுறுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலான மீளாய்வு நடைபெற்றதுடன் முடிவுறுத்தப்படாத வேலைகளை விரைவுபடுத்துமாறும் கூறப்பட்டது.
அரச, அரசசார்பற்ற திணைக்களங்களினால் முன்னெடுக்கப்படும் சேவைகள் குறித்தும் ஆராயப்பட்டது. இதில் சேவையில் சிரமங்கள், சிக்கல்கள் உள்ள விடயங்களை நிவர்த்தி செய்வதற்கும் இதன்போது குறித்த திணைக்களங்களுக்கு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.
பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை, பிரசன்னா இந்திரகுமார், இ.துரைரெட்ணம் இணைப்புக்குழு இணைத்தலைவர் இ.சாணக்கியன் மற்றும் அரச அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் ஊழிர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.




.jpg)
.jpg)

.jpg)


.jpg)
