(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவில் அதிகூடிய புள்ளிகளை பெற்று அம்பிளாந்துறை இளைஞர் அணி முதலிடத்தினை பெற்றுக்கொண்டது.
28வது பிரதேச விளையாட்டு விழா சனிக்கிழமை கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலய குமரகுரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதன் போது உதைபந்தாட்டப்போட்டியின் இறுதி போட்டியும், கயிறு இழுத்தல், எலியோட்டம், முட்டை மாற்றுதல் போன்ற போட்டிகளும் இடம்பெற்றது.
உதைபந்தாட்டப்போட்டியில் அரசடித்தீவு விக்னேஸ்வரா இளைஞர் அணியினை எதிர்த்தாடிய கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா இளைஞர் அணியினர் ஒரு கோளினை இட்டு முதலிடத்தினை பெற்றுக்கொண்டனர்.
இதன்போது பிரதேசத்தின் சிறந்த விளையாட்டு வீரர்ராக அம்பிளாந்துறை கிராமத்தினைச் சேர்ந்த க.நமசிவாயம் தெரிவு செய்யப்பட்டு அவருக்கு நினைவு கிண்ணமும், பரிசிலும் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் குழு விளையாட்டுக்களில் வெற்றியீட்டிய அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்களும், பரிசில்களும், தனி விளையாட்டுக்களில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், மூன்று தனிப்போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக்கிண்ணமும், பரிசிலும் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் தயாசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இளைஞர் சேவைகள் உதவிப்பணிப்பாளர், கொக்கட்டிச்சோலை இராணுவ பொறுப்பதிகாரி, கிராமசேவை உத்தியோகத்தர்களின் நிருவாக உத்தியோகத்தர், சமூர்த்தி முகாமையாளர்கள், பிளான் லங்கா நிறுவனத்தின் உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.




.jpg)
.jpg)

.jpg)


.jpg)
