(படுவான் பாலகன்) ஆசிரியர்கள் என்பவர்கள் தற்கால உலகத்திற்கு ஏற்றவகையில் இருக்க வேண்டும். அதைவிடுத்து குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்களாக இருக்க கூடாது என அட்டாளைச்சேனை தேசிய கல்வியல் கல்லூரி விரிவுரையாளர் ச.ஜெயராசா தெரிவித்தார்.
மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா வியாழக்கிழமை(06) நடைபெற்ற போது அதில் விசேட அதிதியாக கலந்து உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் இங்கு கருத்து தெரிவிக்கையில் ஆசிரியர்கள் தேடல் உள்ளவர்களாகவும், ஆய்வு விடயங்களில் ஈடுபடுபவர்களாகவும், புதிய விடயங்களை மாணவர்களுக்கு வழங்குபவர்களாகவும், தகவல் தொழிநுட்ப அறிவு கொண்டபவர்களாகவும் இருக்க வேண்டும். பிள்ளைகளை உயரச்செய்வதுடன், தாங்களும் உயர்ந்து செல்பவர்களாகவும், ஞானமுள்ள, திறமையுள்ள, திறன்உள்ளவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்றார்.
இதன்போது மாலை அணிவித்து நினைவுப்பரிசில்கள் வழங்கி ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.





.jpg)
.jpg)

.jpg)


.jpg)
