(படுவான் பாலகன்) கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கோப் திட்டத்தின் கீழ் பிரதேச இளைஞர் கழக சம்மேளத்தின் ஏற்பாட்டில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட இளைஞர், யுவதிகளுக்கான பிரதேச இளைஞர் முகாம் முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் நேற்று(25) வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.
பிரதேச இளைஞர்சேவைகள் உத்தியோகத்தர் அ.தயாசீலன தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி டினேஸ், மாவட்ட இளைஞர்சேவைகள் அதிகாரி ஜெ.ஆர்.கலாராணி, உதவிப்பிரதேச செயலாளர் ஆ.நவேஸ்வரன், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பொறுப்பதிகாரி, இராணுவ அதிகாரி, பாடசாலை அதிபர், கிராமசேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளை(27) ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ள குறித்த முகாமில் வினைத்திறனுடன் கூடிய தீர்மானங்களை எடுத்தல், இசையும், ரசணையும், யோகாசணம், திட்டமிடல், ஆளுமை விருத்தி, தீ பாசறை, மென்திறன் விருத்தி போன்ற தலைப்புக்களில் விரிவுரைகள் நடைபெறவுள்ளதுடன், கலந்து கொண்ட இளைஞர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.




.jpg)
.jpg)

.jpg)


.jpg)
