(படுவான் பாலகன்) வைத்தியசாலைகள், அரச நிறுவனங்கள் ஒழுங்காக செயற்பட்டால் விமர்சனங்கள் வெளிவராது. அவ்வகையில் மகிழடித்தீவு வைத்தியசாலை சிறப்பாக சமூகத்தோடு இணைந்து செயற்படுகின்றது. அதனால் வைத்தியசாலையைப்பற்றிய விமர்சனமும் வெளிவரவில்லை என ஓய்வு நிலை வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன் குறிப்பிட்டார்.
மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையின் வருடாந்த ஒன்றுகூடலும், கௌரவிப்பு நிகழ்வும் நேற்று(29) வியாழக்கிழமை இரவு நடைபெற்ற போது அதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
சமூகங்களை ஒன்றிணைத்து பல வைத்தியசாலைகள் செயற்படுவதில்லை. ஆனால் அதற்கு மாறாக சமூகத்தினை ஒன்றிணைத்து மகிழடித்தீவு வைத்தியசாலை செயற்படுவது பாராட்டத்தக்கவிடயமாகும். அதுபோன்று பல வைத்தியசாலைகள், அலுவலகங்கள் பற்றி ஊடகங்களில் விமர்சிக்கப்படுகின்றதை காணமுடிகின்றது. இதற்கு காரணம் எல்லோரும் இணைந்து செயற்படுவதில்லை. எல்லோரும் இணையும்பட்சத்தில் இவ்வாறான விமர்சனங்களை இல்லாமல் செய்யமுடியும் எனவும் கூறினார்.




.jpg)
.jpg)

.jpg)


.jpg)
