(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை பிரதானவீதியின் மகிழடித்தீவு பகுதியில் வைத்து, முச்சக்கரவண்டி வீதியின் அருகில் உள்ள வீட்டின் வேலையை உடைத்து விபத்துக்குள்ளான சம்பவம் இன்று(10) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி பகுதியில் இருந்து கொக்கட்டிச்சோலை சந்தைக்கு பொருட்கள் ஏற்றி வருகைதந்த முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டைமீறி வீதியைவிட்டு விலகி நீர்வடிந்தோடும் வடிகானையும் தாண்டி அருகில் இருந்த வளவின் வேலியை உடைத்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
முச்சக்கரவண்டியை செலுத்தி சென்ற சாரதி எவ்வித காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளதுடன், முச்சக்கரவண்டிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.







.jpg)
.jpg)

.jpg)


.jpg)
