கோட்டைக்கல்லாற்றில் சுனாமி நினைவேந்தல்


ரவிப்ரியா -


 கோட்டைக்கல்லாறு சுவட்டி விளையாட்டுக் கழகத்தினால் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்திற்கு அருகில் நடாத்திய 12வது ஆண்டு சுனாமி நினைவேந்தல் நிகழ்வு கழகத்தின் தலைவர் ஆர்.சுரேஸ் தலைமையில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

அலயங்களின் வண்ணக்கர் மு.தம்பிராசா. குழகத்தின் போஷகர் கலாநிதி க.நீதிராஜா. ஸ்ரீ கந்தசாமி அலயத்தின் தலைவர் எஸ.சவுந்தரராஜன். மற்றும் கழக அங்கத்தவர்கள் மங்கலவிளக்கேற்றி வைத்தனர், இறை வணக்கத்தடன் நிகழ்வு அரம்பமானது  

சுனாமியின்போது (நாவலடியில்) 4குடும்ப அங்கத்தவர்களை இழந்த மா.வரதராஜா ஈகைச்சுடரை ஏற்றிவைத்தார்.
ஆதிதிகளின் உரையைத் தொடர்ந்து. பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் தாகசாந்தி அளிக்கப்படடது. உரையின்போது அடுத்த  ஆண்டு நினைவேந்தலின் போது அன்னதானம் மற்றும் விசேட பூஜை என்பன ஆலையங்களோடு இணைந்து ஒழுங்கு செய்வது பொருத்தமாகவம் சிறப்பாகவும் இருக்குமென அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டது.