மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலை வருடாந்த ஒன்றுகூடலும், கௌரவிப்பு நிகழ்வும்

(படுவான் பாலகன்) மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலை வருடாந்த ஒன்றுகூடலும், கௌரவிப்பு நிகழ்வும் வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் தி.தவநேசன் தலைமையில் நேற்று(29) வியாழக்கிழமை இரவு இடம்பெற்றது.

இதன்போது தேசியமட்டத்தில் உற்பத்தி திறன் போட்டியில் மூன்றாம் இடத்தினை வைத்தியசாலை பெற்றுக்கொண்டமைக்காக அதற்காக உழைத்த ஊழியர்களை கௌரவித்து நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சறோசாதேவி சாள்ஸ், சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கிறேஸ் நவரெட்ணராசா, கிழக்கு பல்கலைக்கழக திருமலை வளாக முதல்வர் கலாநிதி வ.கனகசிங்கம், ஓய்வுநிலை வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன், பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார், கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், வேள்ட்விஸன் நிறுவன முகாமையாளர் இ.மைக்கல் மற்றும் பொலிஸ், சுகாதார சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச திணைக்களங்கள், நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.