கொக்கட்டிச்சோலை படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை படுகொலையின் 30ம் ஆண்டு நினைவுதின நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை(28) பி.ப.02மணிக்கு மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுதூபி அருகில்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

1987 ஐனவரி 28ம் திகதி  இரால்வளர்பு பண்ணையில் தஞ்சம் அடைந்திருந்த பொதுமக்கள் அங்கு கடமை புரிந்த உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானவர்கள் அன்றைய தினம் இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனை நினைவுகூர்ந்து வருடாந்தம் இந்நிகழ்வு நடாத்தப்படுகின்றது.


பட்டிப்பளைப்பிரதேச இலங்கை தழிரசுகட்சி கிளையினால் குறித்த நிகழ்வு நடாத்தப்படவுள்ளது. இந்நிகழ்வுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு மாகாணசபை அமைச்சர்கள் கிழக்குமாகாண உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்தனர்.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்படவுள்ளதுடன், அவர்களின் ஆத்மாசாந்திக்காக ஆலயங்களில் விசேட பூசைகளும் நடைபெறவுள்ளன.