முதன்முறையாக உயர்தரத்திற்கு தோற்றி மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயம் சாதனை

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் புதிதாக உயர்தர கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. இம்மாணவர்கள் கடந்த 2016ம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இவர்களுக்கான பரீட்சை பெறுபேறு அண்மையில் வெளியான நிலையில் மூன்று பாடங்களிலும் “ஏ” தர சித்தியையும் ஆங்கிலத்தில் சீ தர சித்தியும் பெற்று அலையப்போடி தர்சிகா என்ற மாணவி மாவட்டத்தில் 30வது இடத்தினை பெற்றுள்ளார்.

மேலும் இப்பாடசாலையில் இருந்து தோற்றிய மாணவர்களில் பலர்சித்தியடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.