2016ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர பரீட்சைக்கு தோற்றி இன்று(28) செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் சிறந்த பெறுபேறாக 8ஏ தர சித்திகளும் ஒரு சீ தர சித்தியும் பெற்றப்பட்டுள்ளது.
குறித்த பெறுபேற்றினை முதலைக்குடா மகா வித்தியாலய மாணவர்கள் இருவரும், கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலய மாணவர் ஒருவரும் பெற்றுள்ளதாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் தெரிவித்தார்.
மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்டபட்ட பாடசாலைகளில் பெறப்பட்ட சிறந்த பெறுபேறுகளாக, முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் இரு மாணவர்கள் 8ஏ, ஒரு சீ தர சித்தியினையும், கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலய மாணவர் ஒருவர் 8ஏ, சீ தர சித்தியினையும், இன்னொருவர் 7ஏ, ஒரு வீ, ஒரு சீ தர சித்தியினையும், அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலய மாணவர் ஒருவர் 8ஏ தர சித்தியினையும், இன்னொரு மாணவர் 6ஏ, 2வீ, 1எஸ் சித்திகளையும், அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலய பாடசாலை மாணவர் ஒருவர் 6ஏ, 2வீ, ஒரு எஸ் சித்திகளையும், முனைக்காடு விவேகானந்த வித்தியாலய மாணவர் ஒருவர் 6ஏ, 1வீ, 1சீதர சித்திகளையும், இன்னொரு மாணவர் 5ஏ, 1வீ, 3சீ தர சித்திகளையும், மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலய மாணவர்கள் 5ஏ, 1வீ, 2சீ, 1எஸ் தர சித்திகளையும், கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவர் ஒருவர் 3ஏ, 3சீ, 2எஸ் தர சித்திகளையும், கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர் ஒருவர் 2ஏ, 2வீ, 2சீ, 3எஸ் சித்திகளையும், மாவடிமுன்மாரி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர் ஒருவர் 1ஏ, 1வீ, 4சீ, 1எஸ் தர சித்திகளையும், நாற்பதுவட்டை விபுலானந்த வித்தியாலய மாணவர் ஒருவர் 4சீ, 4எஸ் சித்திகளையும் பெற்றுள்ளனர்.





.jpg)
.jpg)

.jpg)


.jpg)
