(ரவிப்ரியா)
உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு மட்/ஒந்தாச்சி மடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயத்தில் வாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கும் பல் பாதுகாப்பு தொடர்பான செயல் முறை வழிகாட்டலும் அண்மையில்வித்தியாலய அதிபர் ப.புண்ணியராசா தலமையில் இடம்பெற்றது.இதன் போது கோட்டைக்கல்லாறு பொது சுகாதார பரிசோதகர் கு.குபேரன் மற்றும் பாடசாலை பற்சிகிச்சையாளர் திருமதி. ஜீவாசதாகரன் ஆகியோரால் மாணவர்களிற்கு வாய் பல் சுகாதாரம் தொடர்பான சுகநலக் கல்வி மற்றும் பற்களை பாதுகாப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டிய பழக்கவளக்கங்கள் அத்தோடு பற்களை சுத்தப்படுத்தும் முறைகள் என்பன தொடர்பான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டது.
இப் பற் சிகிச்சை முகாமில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.














.jpg)

.jpg)

