மகிழடித்தீவு வைத்தியருக்கு அச்சுறுத்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலைப் பகுதியில், மகிழடித்தீவு கிராமத்தில் அமைந்துள்ள மகிழடித்தீவு மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியரை கடந்த வெள்ளிக்கிழமை இருவர் அச்சுறுத்தியதாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில், வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


குறித்த அச்சுறுத்தல் காரணமாக, சனிக்கிழமை வைத்தியசாலையின் வைத்தியர்கள் வைத்தியசாலைக்கு சமூகம்தராததினால், வெளிநோயாளர் பிரிவிற்கு வருகைதந்திருந்த நோயாளர்கள் பாதிப்பினை எதிர்கொண்டதாக மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ரி.தவனேசனிடம் வினாவிய போது, 

வைத்தியசாலைக்கு கடந்த வெள்ளிக்கிழமை வயோதிபரின் பிரேரம் ஒன்றை வைத்தியசாலைக்கு இருவர் கொண்டுவந்தனர். குறித்த பிரேரத்தினை மீண்டும் கொண்டுசெல்லமுனைந்தனர். அவ்வேளையில் பொலிஸாருக்கு அறிவிக்கவேண்டும் என்று கூறிய போது, அங்கு வந்திருந்த ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தல் விடுத்தார். என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச அதிகாரிகளை அச்சுறுத்தும் செயற்பாடுகளும், கொலைசெய்யும் சம்பவங்களும் அண்மைக்காலமாக இடம்பெற்றுவருவதாகவும் அண்மையில் அரசாங்க அதிபர் குறிப்பிட்டிருந்தார்.