(தமிழன்)மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும், சமுர்த்தி திணைக்களமும் இணைந்து போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வினை பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றனர். மாணவர்களுக்கு “போதைப்பொருள் நுகர வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் உறுதிமொழிகள் வழங்கப்பட்டு சத்தியப்பிரமாணமும் பெறப்பட்டது.
அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகாவித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கு சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவடிமுன்மாரி சமுர்த்தி வங்கி முகாமையாளர் சீ.ரவீந்திரன் அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலய அதிபர் செ.சிவநடேஸ், ஆசிரியர் செ.ஸ்ரீதரன், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது வளவாளரால் போதைப்பொருள் பாவணையால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றியும், அதனுடைய பக்க விளைவுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை எவ்வாறு உள்ளது என்பது பற்றியும் வீடியோக்காட்சிகள் மூலம் மாணவர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.







.jpg)
.jpg)

.jpg)


.jpg)
