ஆரம்பம் 02.07.2017 நிறைவு 09.07.2017
தீக்கட்டை எழுந்தருளப்பண்ணல் 08.07.2017
(அரசையூர் சு.சிறிகரன்)
வீரம் விளைந்த எங்கள் மீன்பாடும் தேநாட்டில் போரோய்ந்து எங்கள் புனித மண் எழுச்சி பெற்று பச்சை வயல் வெளியும், பனந்தோப்பு சோலைகளும், குறிஞ்சி நிலக் குமரன் வீற்றிருக்கும் குன்றுகளும், மருத நிலம் சூழ்ந்து வனப்பூட்டும் செந்தாமரைப் பொய்கைகளும். கல்மாடு புல் தின்று கணப்பொழுதில் வெள்ளையனை நில்லாது துரத்தி நிலையாக குடியமர்ந்த தாந்தோன்றி அப்பனுக்கு அருகில் இருந்து அருளாட்சி செய்கின்ற அரசடித்தீவில் உறை ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு வருடாந்த உற்சவப் பெருவிழா ஏ விளம்பி வருடம் ஆனி மாதம் 18ம் நாள் (02.07.2017)ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்கும்பம் வைத்தலோடு ஆரம்பமாகி (09.07.2017) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ மிதிப்பும், திருக்குளிர்த்தியும் அதனை தொடர்ந்து இடம் பெறும் தீர்த்தோற்சவத்துடன் திருச்சடங்கு இனிதே நிறைவு பெறும்.
உற்சவ கால நிகழ்வுகள்.
01.07.2017 சனிக்கிழமை இரவு கிரியை நிகழ்வுநாள் யாவும் இடம் பெறும்.
02.07.2017ஞாயிற்றுக்கிழமை 1ம் நாள் திருச்சடங்கு முற்பகல் 10.00 மணிக்கு பண்டாரியவெளி நாகதம்பிரான் ஆலயத்திலிருந்து பாற்குடபவனியும், தொடந்து சங்காபிசேகமும் இடம் பெறும் இரவு திருக்கும்பம் வைக்கும் நிகழுவும் , தொடந்து கூட்டு வழிபாடும் ,இரவுச் சடங்கும் இடம்பெறும்.
03.07.2017 திங்கட்கிழமை 2ம் நாள் திருச்சடங்கு பகல் சடங்கு இடம்பெறும். அதனை தொடந்து கதாப்பிரசங்கமும் , கூட்டு வழிபாடும் அம்பாளின் மகரதோரண ஊர்வலமும் அதனை தொடர்ந்து இரவுச் சடங்கும் இடம்பெறும்.
04.07.2017 செவ்வாய்க்கிழமை 3ம் நாள் திருச்சடங்கு பகல் சடங்கும் அம்மன் வீதி ஊர்வலமும் இடம்பெறும்.
அதனைத் தொடந்து குருக்கேத்திரன் போர் எனும் வடமோடி நாட்டு கூத்தும் தொடந்து இரவு சடங்கும் இடம்பெறும்.
05.07.2017 புதன்கிழமை 4ம் நாள் திருச்சடங்கு பகல் சடங்கும் அம்மன் வீதி ஊர்வலமும் இடம்பெறுவதுடன் கூட்டு வழிபாடும் , கதாப்பிரசங்கமும் இரவுச் சடங்கும் இடம்பெறும்.
06.07.2017 வியாழக்கிழமை 5ம் நாள் திருச்சடங்கு பகல் சடங்கு அம்மன் வீதி ஊர்வலமும் இடம் பெறும், அன்றிரவை சிறப்பிக்கும் முகமாக விக்னேஸ்வரா இந்து சமய வளர்ச்சி மன்றமும் அறநெறி பாடசாலையும் இணைந்து நடாத்தும் கலை நிகழ்வும் இடம்பெறும். தொடந்து இரவு சடங்கு இடம்பெறும்.
07.07.2017 வெள்ளிக்கிழமை 6ம் நாள் திருச்சடங்கு பகல் சடங்கும் அம்மன் வீதி ஊர்வலமும் இடம்பெறும் அன்றிரவு தவநிலைச் சடங்கினை சிற்ப்பிக்கும் முகமாக மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய அதிபர்,ஆசிரியர்கள் ,மாணவர்கள் மற்றும் கல்விசாரா பணியாளர்கள் இணைந்து வழங்கும் மாபெரும் கலைக்கோலமும் இடம்பெறும்.
08.07.2017 சனிக்கிழமை 7ம் நாள் திருச்சடங்கு காலை 10.00மணிக்கு ஸ்ரீ முத்துலிங்கப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து தீக்கட்டை எழுந்தள பண்ணலுடன் மேள தாள வாத்தியங்களுடனான ஆனந்தக் காவடிகளும் பறவைக்காடிகளும் அடியார்களின் கற்பூர சட்டி எடுத்தலும் மற்றும் நேர்த்தி கடன்களும் ஆலயத்தை வந்தடையும். அன்றிரவுச் சடங்கினை சிறப்பிக்கும் முகமாக அரசடித்தீவு இளங்கதிர் காலமன்றத்தின் 42வது விழாவும் கலை நிகழ்வும் இடம்பெறும்.
09.07.2017 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீமிதிப்பு வைபவமும் , பள்ளயச்சடங்கும், திருக்குளிர்த்தியும், நடைபெற்று தீர்த்தோற்சவத்துடன் அனைத்தும் நிகழ்வும் இனிதே நிறைவு பெறும்.
உற்சவ காலங்களில் அன்னதானம் வழங்கப்படும்.
"மூவுலகும் வென்றவளே மாரித்தாயே எம்மையெல்லாம் காத்தருள்வாய்"
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் ஆலய பரிபாலன சபையினரும்,கிராம மக்களும்.





.jpg)
.jpg)

.jpg)


.jpg)
