
(அரசையூர் சு.சிறிகரன்)
மட்டக்களப்பு அரசடித்தீவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய திருச்சடங்கையொட்டி பாற்குட பவனி மற்றும் சங்காபிஷேக நிகழ்வு (02/07/2017) சிறப்பான முறையில் இடம்பெற்றது.
இந்த பாற்குட பவனியானது
பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலயத்திலிருந்து
ஆரம்பமாகி பிரதான வீதியூடாக சென்று ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை சென்றடைந்தது.
அதன் பின்னர்
அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் பாலாபிஷேகம், சங்காபிஷேகம் என்பன இடம்பெற்றதுடன், யாக பூசைகள் யாவும் சிவாச்சாரியார்களால் சிறந்த முறையில் இடபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் தொடர்ந்து விசேட பூசைகள் இடம்பெற்றதுடன் பின்பு அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.













.jpg)
.jpg)

.jpg)


.jpg)
