ஒருநாள் கொண்ட இச் செயலமர்வில், கூத்து, கும்மி, கரகம், வசந்தன் உள்ளிட்ட கலைகளையும் உடையலங்காரம், இசை போன்ற கலைகளையும் கலைஞர்களுக்கிடையே தெளிவுபடுத்தலுடன் அதனை அவர்களுள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் வருகைதந்த கலைஞர்களுக்கு செயல்முறையுடன் விளக்கங்களும் வழங்கப்பட்டது.
கலாசார உத்தியோகத்தர் எம்.சிவானந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, கணக்காளர் வீ.வேல்ராஜசேகரம் காலாபூசணம் எம்.அருளம்பலம், கலைஞர் எஸ்.சுமன் போன்றோர் கலந்துகொண்டனர்.






.jpeg)





