(க.சரவணன் )
மட்டக்களப்பு ஏறாவூர் இரட்டை படுகொலையின் பிரதான சூத்திரதாரியென
சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர்தெரிவித்தார்.
கடந்த 18 ம் திகதி தீபாவளி தினத்தன்று ஏறாவூர் சவுக்கடி முருகன் கோவில்
வீதியிலுள்ள 26 வயதுடைய தாயும் 11 வயதுடைய மகனும் படுகொலை செய்யப்பட்டனர்
இச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் மூவரை கைது செய்து நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த
நிலையில் பிரதான சூத்திரதாரியை நேற்று மட்டக்களப்பு மாவட்ட
புலன்விசாரனைக் குழுவினர் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் கடந்த 4 மாதங்களாக அந்த பகுதியில் சகோதரர்
வீட்டில் தங்கியிருந்து வருவதாகவும் லீசிங் கொம்பனி ஒன்றிற்கு பணம்
கட்டவேண்டிய தேவை நிமித்தம் பணம் இல்லாததன் காரணமாக பணத்திற்காக இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை இக் கொலை தொடர்பாக 80 ற்கும் அதிகமானோரிடம் விசாரணைகள்மேற்கொண்டுள்ளதுடன் 27 பேரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளதுடன்மட்டக்களப்பு தலைமையக பொலிசார் , ஏறாவூர், வாழைச்சேனை பொலிசார் . மற்றும்
விசேட புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.






.jpg)







.jpg)