ஈழ போராட்டத்தின் இந்திய இராணுவ அடக்குமுறைகளுக்காக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 1988.03.19 ஆம் திகதியிருந்து 1988.04.19 ஒரு மாதகாலம் உண்ணாவிரத போராட்டத்திலிருந்து உயிர் நீத்த அன்னைபூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு மாதம் ஆரம்பமாகின்றது.

அதனடிப்படையில் மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அவரது நினைவாலயத்தில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் 19 ஆம் திகதி சிரமதானப்பணிகள் நடைபெற்று மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
அந்தவகையில் இறுதி நாள் நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ளதாக தேசத்தின் வேர்கள் அமைப்பின் இயக்குனர் கணேசன் பிரபாகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.