ஓந்தாச்சிமடம் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த சக்தி விழா


(சிவம்)

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் ஸ்ரீ கற்பக விக்னேஸ்வரருடன் இணைந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த சக்தி விழா எதிர்வரும் செவ்வாய் (17.04.2018) மாலை ஸ்ரீ வடபத்திரகாளியம்மன்  ஆலயத்திலிருந்து அம்மனை எழுந்தருளப் பண்ணி வந்து கதவு திறத்தலுடன் ஆரம்பமாகும்.

தொடர்ந்து இரு நாட்கள் (18 - 19) காலை மதியம் விஷேட பூஜையைத் தொடர்ந்து மாலை ஊர் காவல் பண்ணுதல் இடம்பெறும்.
நான்காம் நாள் வெள்ளிக்கிழமை (20) காலை மதியம் விஷேட பூஜையைத் தொடர்ந்து பிற்பகல் ஸ்ரீ அரசடி விநாயகர் ஆலயத்திலிருந்து வாழைக்காய் எழுந்தருளப் பண்ணுதல்.

சனிக்கிழமை (21) அதிகாலை கும்பம் சொரிதல், மதிய பூஜை மற்றும் மாலை அம்பாள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்துச் சப்பரத்தில் ஆரோகணித்து ஊர் வீதி வலம் வந்து அடியார்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்வும்

ஞாயிறு (22) காலை மதியம் விஷேட பூஜையைத் தொடர்ந்து பிற்பகல் நெல்குற்றுதலும்; இரவு அலங்கார பூஜையும்

திங்கள் (23) அதிகாலை விசேட சக்தி யாகம், அபிஷேகம், பூரண கும்பம் நிறுத்துதல், விநாயகப் பானை எழுந்தருளப் பண்ணல், காத்தான் கன்னிமார் வைத்தல் மற்றும் அம்மனுக்கு பூஜை ஒப்புக் கொடுத்தலுடன் வருடாந்த சத்தி விழா நிறைவு பெறும்.

செவ்வாய் (24) இரவு வைரவர் பூஜையும், வெள்ளிக்கிழமை (27) நாகதம்பிரான் பொங்கல் விழாவும், ஞாயிறு (29) சித்திரக்குப்த விரதமும், பூரணைப் பூஜையும் இடம்பெறும்.

சக்தி விழா கிரியைகளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான பிரதம குரு விஸ்வப்பிரம்ம ஸ்ரீ ஏ.குமாரலிங்கம் குரு மற்றும் ஸ்ரீ கற்பக விக்னேஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பி. கஜேந்திரக் குருக்கள் நிகழ்த்துவர்.